No menu items!

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு!

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு!

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவியை கடந்த சனிக்கிழமை அதிகாலை அமெரிக்க படைகள் கைது செய்தது. தொடர்ந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அரசின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட ரோட்ரிகஸ் இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“உலகிற்கும், அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவில் இருந்து ஒரு செய்தி. வெனிசுவேலா அமைதியான வாழ்வுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறது. எங்கள் நாடு வெளிப்புற அச்சுறுத்தல்கள் இல்லாமல் மரியாதையுடன், சர்வதேச ஒத்துழைப்புடன் வாழ ஆசைப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் உள் அமைதியின் மூலம் உலக அமைதி கட்டமைக்கப்படுகிறது என்பதை நாங்கள் நம்புகிறோம்.

அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையே இறையாண்மை சமத்துவம் மற்றும் தலையீடு இல்லாத மரியாதைக்குரிய சர்வதேச உறவுகளை நோக்கி நகர்வதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

நீடித்த சமூக இணை வாழ்வை வலுப்படுத்த, சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பில் பகிரப்பட்ட வளர்ச்சியை நோக்கிய ஒத்துழைப்பு விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தை எங்களுடன் இணைந்து செயல்பட அழைக்கிறோம்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களே, எங்களின் பிராந்தியமும் மக்களும் அமைதி மற்றும் உரையாடலுக்கு தகுதியானவர்கள், போருக்கு அல்ல.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நமது மக்கள் மற்றும் நமது பிராந்தியம் போருக்கு அல்ல, அமைதி மற்றும் உரையாடலுக்கு தகுதியானது. இதுவே அதிபர் மடூரோவின் செய்தியாக இருந்து வருகிறது. தற்போது அனைத்து வெனிசுவேலாவின் செய்தியாக இருகிறது.

வெனிசுலாவுக்கு அமைதி, வளர்ச்சி, இறையாண்மை மற்றும் எதிர்காலத்திற்கான உரிமை உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...