No menu items!

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் எச்சரிக்கை

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் எச்சரிக்கை

கிரீன்​லாந்தை அமெரிக்கா கைப்​பற்​றி​னால் நேட்டோ கூட்​டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்​மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் எச்​சரிக்கை .

ஐரோப்​பிய நாடான டென்​மார்​கின் கட்​டுப்​பாட்​டின் கீழ் தன்னாட்சி பெற்ற பகு​தி​யாக கிரீன்​லாந்து செயல்​படுகிறது. இது உலகின் மிகப்​பெரிய தீவு ஆகும். பாது​காப்பு காரணங்​களுக்​காக இந்த தீவு அமெரிக்கா​வுடன் இணைக்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் தெரி​வித்​தார்.

இதுகுறித்து டென்​மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்​சன் நேற்று கூறிய​தாவது: இரண்​டாம் உலகப் போருக்கு பிறகு நேட்டோ கூட்டமைப்பு உரு​வாக்​கப்​பட்​டது. இந்த அமைப்​பில் அமெரிக்காவும் டென்​மார்க்​கும் இடம் பெற்​றுள்​ளன. நேட்டோ கூட்டமைப்​பின் ஒப்​பந்​தத்​தின்​படி உறுப்பு நாடு​கள் ஒரு​வர் மீது ஒரு​வர் தாக்​குதல் நடத்​தக்​கூ​டாது. ஏதாவது ஓர் உறுப்​பினருக்கு ஆபத்து என்​றால் ஒட்​டு மொத்த நேட்டோ நாடு​களும் களமிறங்கும்.

தற்​போது டென்​மார்க்​கின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கிரீன்​லாந்து தீவு அமெரிக்கா​வுக்கு தேவை என்று அதிபர் ட்ரம்ப் கூறுகிறார். இது நேட்டோ கூட்​டமைப்பு ஒப்​பந்​தத்​துக்கு எதி​ரானது. இதை ஒரு​போதும் ஏற்க மாட்​டோம். வெனிசுலா நாட்​டுடன் கிரீன்​லாந்தை ஒப்​பிட முடி​யாது.

ஒரு ​வேளை கிரீன்​லாந்தை அமெரிக்கா கைப்பற்​றி​னால் நேட்டோ கூட்​டமைப்பு உடைந்து சிதறும். இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...