திரையுலகைப் பற்றி எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் விமர்சனம் செக்ஸ் புகார்தான். இது அவ்வப்போது சினிமாவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும். இதில் மொழி வித்தியாசமெல்லாம் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் ஒரு முன்னணி நடிகை தனக்கு பிரபல கதாநாயகன் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும். சில நண்பர்கலை வைத்து அவர் தன்னை காரில் கடத்தில் சென்று பலாத்காரம் செய்ததாகவும் ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்தார். இது இந்திய சினிமாவைவே அதிர வைத்தது. இதைத்தொடர்ந்து அவர் குற்றம்சாட்டிய ஹீரோ மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையும் நடந்தது. அதோடு இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்கிற உண்மையை கண்டுபிடிக்க ஒரு நபர் விசாரணை கமிசனை அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா இது குறித்து விசாரணை நடத்தி சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். இதனை கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் அவர் வழங்கினார்.
இந்த அறிக்கையில் நீதிபதி ஹேமா அவர்கள் பல அதர்ச்சியான தகவல்களை வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. கேரளா சினிமாவில் நடக்கும் பலவேறு உண்மைகளை இந்த அறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
மலையாளத்தில் சில முன்னணி நடிகர்களின் அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றினால் பல விஷயங்களை சாதித்துக் கொள்கிறார்கள். அதில் குறிப்பாக பெண்களை ஆசைக்கு இணங்க வைப்பதும் நடக்கிறது. இதை துணிச்சலாக எதிர்க்கும் நபர்களை தொடர்ந்து சினிமாவில் நடிக்க விடாமல் தடை போடுவதும் நடக்கிறது. இந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமல்ல சில ஆண்களும் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள் என்கிற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது இந்த அறிக்கை. இந்த அதிகாரமிக்கவர்கள் பின்புலத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் முரண்டு பிடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கும் தடை போடப்பட்டிருக்கிறது. இதையும் தாண்டி சில நடிகள் இனந்த மறைமுக ஆளுமைகளுக்கு எதிராக பேட்டியில் பேசியிருப்பதையும் கமிஷன் சுட்டிக்காட்டியிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள சினிமாவில் சில நடிகைகள் தங்களுக்கு எதிராக நடக்கும் இந்த காம அணுகுமுறையை எதிர்த்து பேசியிருக்கிறார்கள். அவர்களை பழி வாங்கும் வகையில் சிலர் நடந்து கொண்டதும், ஒரு கட்டத்தில் நடிகைகள் ஒன்றிணைந்து டபிள்யூ.சி.சி. என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள் இதையும் ஹேமா கமிஷன் பாராட்டியிருக்கிறது. கமிஷனில் நடிகை சாரதா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வத்சலா குமாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் பல கட்ட விசாரணையில் பலரிடம் கேட்ட தகவல்களையும் அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள்.
பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பல செக்ஸ் கொடுமைகளையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டு திரைப்படங்களில் நடித்ததையும் மனதிறந்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள் பலரது பெயர்களும் அடிபடுகின்றன. இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகும் என்கிறார்கள். இதனால் மக்களின் அதீத அன்பைப் பெற்றிருக்கும் பலரது புகழுக்குக் களங்கம் ஏற்படும் என்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிக்கையை தாக்கல் செய்து விட்ட பிறகும் அதனை கேரள அரசு வெளியிடாமல் மௌனம் காத்து வந்தது. இதனால் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில் இந்த முழு அறிக்கையையும் வெளியிடாமல் 233 பக்கங்களை மட்டும் வெளியிட்டிருக்கிறது கேரள அரசு.