No menu items!

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியப் படைகள்

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியப் படைகள்

சர்வதேச செஸ் போட்டிகள் என்றாலே ஒரு காலத்தில் ரஷ்யர்களின் கைதான் ஓங்கி இருந்தது. ஆனால் விஸ்வநாதன் ஆனந்தின் வரவுக்குப் பின் அந்த சூழல் மாறி இருக்கிறது. இந்திய வீரர்களாலும் சர்வதேச செஸ் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் சூழலில், இப்போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணிகளைப் பற்றியும் அவர்களுக்கு இந்த சாம்பியன்ஷிப்பில் உள்ள வாய்ப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

சர்வதேச செஸ் விதிகளைப் பொறுத்தவரை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு அணியைத்தான் பங்கேற்கச் செய்ய முடியும். ஆனால் போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியாவால் தலா 2 அணிகளை அனுப்ப முடியும். இந்த சூழலில் இம்முறை ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் (187) வந்தது.

இது போட்டியை நடத்த சிக்கலான சூழலை ஏற்படுத்தியதால் இந்தியாவின் சார்பில் இப்பிரிவில் 3 அணிகளை அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் இம்முறை ஆண்கள் பிரிவில் 3 அணிகள், பெண்கள் பிரிவில் 2 அணிகள் என இந்தியா சார்பில் 5 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த அணிகளில் யாரெல்லாம் இருக்கிறார்கள். அணிகளின் பலம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்…

ஆண்கள் பிரிவு

இந்தியா ஏ

பி,ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல்.நாராயணன், கே.சசிகிரண், என்.ஸ்ரீநாத் ஆகிய 5 வீரர்களைக் கொண்டதாக இந்தியா ஏ அணி உள்ளது. சர்வதேச செஸ் தரவரிசைப் பட்டியலில் 25-வது இடத்தில் உள்ள ஹரிகிருஷ்ணாதான் இந்த அணியின் முக்கிய வீரராக கருதப்படுகிறார். 36 வயதான சசிகிரண், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச செஸ் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். 2001-ம் வயதில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த சசிகிரண், அதே ஆண்டில் காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்றார். பின்னர் உலக செஸ் ஜூனியர் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

இந்த அணியில் உள்ள மற்றொரு வீரரான விதித் குஜராத்தி, 2020-ல் ரஷ்யாவில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 2021-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கால் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய குஜராத்தி, அதைவிட சிறப்பாக இந்த தொடரில் முன்னேற்றம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு வீரரான அர்ஜுன் எரிகேசிக்கு 18 வயதுதான் ஆகிறது. சர்வதேச செஸ் ராங்கிங்கில் முதல் 100 வீரர்களில் ஒருவராக இவர் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் பெரிய அளவில் வெற்றி பெறுவதன் மூலம், முதல் 50 வீரர்களின் பட்டியலில் இடம்பெறலாம் என்பது அவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த அணியில் உள்ள மூத்த வீரரான சசிகிரணுக்கு 41 வயது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட செஸ் ஒலிம்பியாட்டில் அவர் பங்கேற்றுள்ளார். இந்த அனுபவம் அணிக்கு கைகொடுக்கும்.

இந்தியா பி

இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் மிகவும் அபாயகரமான அணியாக இந்தியா பி இருக்கும் என்று கணித்துள்ளார் சர்வதேச செஸ் சாம்பியனும், செஸ் ராங்கிங்கில் முன்னணியில் உள்ள வீரருமான மேக்னஸ் கார்ல்சன். சர்வதேச போட்டிகளில் அவரை 2 முறை வீழ்த்திய தமிழக வீரரான பிரக்ஞானந்தா இந்த அணியில் இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

இந்தியா பி அணியில் பிரக்ஞானந்தாவுடன் நிஹால் சரின், டி.குகேஷ், பி.அதிபன், ரானக் சத்வானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். செஸ் உலகில் வேகமக வளர்ந்து வரும் வீரர்களைக் கொண்ட இந்த அணிக்கு இந்தியாவின் மிகச்சிறந்த செஸ் பயிற்சியாளரான ரமேஷ் பயிற்சியாளராக உள்ளார்.

இந்தியா சி

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்று குறைந்துபோனதால் இந்தியா சி அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சூர்ய சேகர் கங்குலி, எஸ்.பி.சேதுராமன், கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா, அபிமன்யு புரானிக் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணியின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. இருப்பினும் சர்வதேச செஸ் போட்டிகளில் ஆடி அனுபவம் பெற இவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இது கருதப்படுகிறது.

பெண்கள் பிரிவு

இந்தியா ஏ:

ஆன்களைப் போல் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் அத்தனை வலுவாக இல்லை. கொனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் முக்கிய வீரர்களாக கொனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோர் உள்ளனர். குறிப்பாக தனது 4-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் ஹம்பி, அனுபவம் வாய்ந்த வீராங்கனையாக கருதப்படுகிறார். இருப்பினும் கடந்த 202-ம் ஆண்டுமுதல் அவர் சர்வதேச செச் போட்டிகளில் ஆடாதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது.

இந்தியா பி

வனித்கா அகர்வால், பத்மினி ராவத், மேரி ஆன் கோம்ஸ், சவுமியா சுவாமிநாதன், திவ்யா தேஷ்முக் ஆகியோரைக் கொண்ட இந்தியா பி அணிக்கும் அவ்வளவாக அனுபவம் இல்லை. இருப்பினும் இளம் வீராங்கனைகளைக் கொண்ட இந்த அணி ஏதாவது பெரிய அனிகளுக்கு அதிர்ச்சி அளிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...