No menu items!

சிட்​டிஸ் இன் மோஷன்  ஆய்வில் சென்னை மூன்றாவது இடம்

சிட்​டிஸ் இன் மோஷன்  ஆய்வில் சென்னை மூன்றாவது இடம்

ஸ்​கொயர் யார்ட்​ஸ் என்ற ரியல் எஸ்​டேட் இணை​யதளம் நகரங்​களில் கட்​டிடங்​கள் அதி​கரிக்​கும் அளவை செயற்​கைக்​கோள் படங்​களை கொண்டு கணக்​கிட்டு ‘சிட்​டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்​பில் ஆய்வு ஒன்றை நடத்​தி​யுள்​ளது.

இதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​திய நகரங்​களில் மகா​ராஷ்டிரா மாநிலத்​தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்​டு​களில் மிகப் பெரிய வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளது. நகர்ப்​புற எல்லை பல திசைகளில் விரிவடைந்​து, தற்​போது நகர்ப்​புற வளர்ச்​சி​யில் நாட்​டில் முதல் இடத்தை பிடித்​துள்​ளது.

இரண்​டாவது இடத்தை பெங்​களூரு பிடித்​துள்​ளது. நமது சென்னை இந்த பட்​டியலில் 3-ம் இடத்தை பிடித்​துள்​ளது. இதே காலத்​தில் கட்​டிடங்​களின் அளவு 197 சதுர கி.மீட்​டரில் இருந்து 467 சதுர கி.மீ-ஆக உயர்ந்​துள்​ளது. வாக​னம், எலக்ட்​ரானிக்​ஸ், தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள், சரக்கு போக்​கு​வரத்து ஆகிய துறை​களின் வளர்ச்​சி​யால் சென்​னை​யும் வளர்ச்​சி​யடைந்​தது.

டெல்லி தேசிய தலைநகர் மண்​டலம், ஹைத​ரா​பாத், அகம​தா​பாத், கொல்​கத்​தா, மும்பை ஆகிய நகரங்​களின் வளர்ச்சி சதவீதம் அடுத்​தடுத்த இடத்​தில் உள்​ளது. இவ்​வாறு அந்த ஆய்​வறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...