No menu items!

ஒவியா இப்படி செய்யலாமா – குவியும் எதிர்ப்பு!

ஒவியா இப்படி செய்யலாமா – குவியும் எதிர்ப்பு!

கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமலும், பொது விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே நடிகையாக இருப்பவர் ஓவியா மட்டுமே. அந்தளவுக்கு இணையத்தில் இன்னமும் ஓவியாவுக்கென்று ரசிகர்கள் ஆர்மி என்ற பெயரில் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.

திரைப்படங்களில் நடித்துக் கிடைத்த புகழை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையான பேச்சும் அதிரடியான நடவடிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரசை பெருக்கியது. அப்போது ஆரம்பித்ததுதான் ஓவியா ஆர்மி என்கிற ரசிகர்களின் கூட்டம். அந்த ரசிகர்கள் இப்போது பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

அவருடைய டுவிட்டர் இன்ஸ்டா பக்கங்களில் ஓவியாவை பின் தொடரும் ரசிகர்கள் தொடர்ந்து அவருடைய புகைப்படங்களையும் செய்திகளையும் வைரல் செய்தவதற்கென்று இயங்கி வருகிறார்கள். சமீபத்தில் ஓவியா ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் கையில் மது கோப்பையை வைத்துக் கொண்டு குடிப்பதைப்போல இருக்கும் அந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆனது. ஆனால் மது குடிப்பதன் தீமையையும் பக்கத்தில் எழுதியிருந்தார். இருந்தாலும் ஓவியா இப்படிப்பட்ட போட்டோவைப் பதிவிட்டது குறித்து ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு சிலர் ஓவியாவை கடுமையாக விமர்சனம் செய்து எழுதி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கல்லூரி விழாவில் பேசும்போது, பிள்ளைகளிடம் பெற்றோர்கள் வெளிப்படையாக பேச வேண்டும். அப்போதுதான் சில பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே தடுக்க முடியும் என்று பேசியிருந்தார்.

இது பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க முடியும் என்கிற அர்த்தத்தில் இப்படி பேசியிருந்தார். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு ரசிகர் சுய இன்பம் பற்றி பேசினார். இதற்கு பதிலளித்த ஓவியா அது நல்லதுதான் என்றும் கூறியிருந்தார். இந்த சூழலில் ஓவியாவின் இந்த மது குடிப்பது போன்ற போஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

யாருக்கும் இல்லாத ஒரு அன்பு உங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்களாக உங்கள் புகழை கெடுத்துக் கொள்வது நல்லதல்ல என்பது போன்ற கமெண்டுகளும் ரசிகர்கள் எழுதுகிறார்கள்.

நான் மது குடிப்பதில் இருக்கும் தீமைகளை சொல்லத்தான் இந்த போட்டோவை போட்டேன் என்றார் ஓவியா. ஆனால் அது போன்ற அறிவுரை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை என்று இன்னொரு பக்கம் ரசிகர்கள் கொத்தித்துப் போயிருக்கிறார்கள்.

திரைப்படங்கள் வெளியாகாமலே எப்போதும் வெளிச்சத்தில் இருப்பது என்பது ஓவியாவுக்கு மட்டுமே தெரிந்த கலைதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...