No menu items!

விஜய் GOAT படத்தில் பவதாரிணி!

விஜய் GOAT படத்தில் பவதாரிணி!

தமிழ் சினிமாவில், சில குரல்கள், சில முகங்கள் மறக்க முடியாமல் நம் மனதிலேயே தங்கி விடும். அவர்கள் மறைந்த பிறகு மீண்டும் அந்த குரலை, அந்த முகத்தைப் பார்க்க மாட்டோமா என்று மனது ஏங்கி தவிக்கும். அப்படி ஒரு குரல் பாடகி பவதாரிணி குரல். சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிகவும் அரிதான அவருடைய குரல் வளம் பலரையும் வசீகரிக்து. அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு, மஸ்தானா மஸ்தானா போன்ற பாடல்கள் தனி ரகம். இந்தக் குரலை எப்படியாவது தனது இசையில் மீண்டும் பாட வைத்து விட வேண்டும் என்று பவதாரிணியின் சகோதரர் யுவன் சங்கர் ராஜா திட்ட்மிட்டிருக்கிறார்.

விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்திற்கு தற்போது இசையமைத்து வருகிறார் யுவன். இந்தப் படத்தில் ஒரு பாடலை அக்கா பவதாரிணி குரலை விஞ்ஞான தொழில் நுட்பமான ஏ ஐ தொழில் நுட்பத்தை வைத்து பயன்படுத்தியிருக்கிறார். இது கோட் படத்திற்கு பலருக்கும் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யுவன் சங்கர் பவதாரிணி இருவருக்கும் இருக்கும் அன்பும், நட்பும் உறவுகளைக் கடந்தது.

இருவரும் இருக்கும் இடத்தில் கலாட்டாவும், கேலி பேச்சுமாக குதூகலமாக இருக்கும். அக்கா என்ற பந்தத்தை தாண்டி நண்பனாக யுவனைப் பார்த்தார். யுவன் அரவிந்தன் என்ற முதல் படத்திற்கு இசையமைத்தபோது அக்கா பவதாரிணியை பாட வைக்க வேண்டும் என்று நினைத்தார். இது பற்றி பவதாரிணியிடம் சொன்னபோது பாடலை கேட்டு விட்டு இதில் எங்காவது உன்னை வாழ்த்தி பாடுற மாதிரி வரிகள் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார் பவதாரிணி. அதனால்தான் பாடல் எழுதிய பழநிபாரதியிடம் சொன்னபோது ஆல் த பெஸ்ட் ஆல் த பெஸ்ட் என்று சொல்லி விட்டு பாடுமாறு பாடலை டியுன் செய்தார் யுவன்.

அக்கா பவதாரிணியின் மீது தனி பாசம் வைத்திருக்கும் யுவன் தனது முதல் படத்தில் பாடியதால் கடைசியாகவும் பவதாவின் குரலை பயன்படுத்தியிருக்கிறார். அதுவும் சகோதரர் வெங்கட்பிரபுவின் படம் என்பதால் இந்த ஐடியாவை கட்டாயம் செய்து காட்ட வேண்டும் என்று நினைத்து செய்திருக்கிறார்.
இந்த ஏ.ஐ தொழில் நுட்பம் என்பது பல திரையுலகில் வகைகளிலும் சிறப்பாக பயன்படுத்த உதவிகரமாக இருக்கிறது.

குறிப்பாக இந்தியன் 2 படத்தில் நெடுமுடி வேணு, விவேக் இன்னும் சிலர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே இறந்து விட்டனர். இவர்களது காட்சிகள் படத்தில் அழுத்தமான இடத்தில் இருப்பதால் அதனை நீக்க முடியாமல் போய் விட்டது. அதனால் இந்த ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களது குரலையும், உருவத்தையும் சில காட்சிகளில் வரும்படி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். அதைவிட விஜய் நடிக்கும் கோட் படத்தில் ஒரு காட்சியில் விஜயகாந்தையும் நேரில் வருவது போல் காட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு.

தொழில்நுட்ப வசதி இருக்கிறது என்பதற்காக ஒரு நடிகரை பயன்படுத்த முடியாது என்றாலும் இன்றைய சூழலில் ரசிகர்களின் மன நிலை பழைய திரைப்படங்களை மீண்டும் பார்ப்பதிலும், மோகன், ராமராஜன் மாதிரியான ஹீரோக்களை மீண்டும் கொண்டாடத்தொடங்கியிருக்கிறார்கள்,. இந்த உணர்வை தங்கள் படங்களில் பயன்படுத்தி வெற்றி பெற வைக்க பல முயற்சிகளில் இயக்குனர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...