கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் ஹீரோயினாக நடித்துள்ள முதல் படம் பேபி ஜான். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இப்படத்தில் வருண் தவான் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு முன்னரே நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணமும் செய்துகொண்டார். அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை கடந்த டிசம்பர் 12-ந் தேதி கரம்பிடித்தார். இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதில் விஜய், திரிஷா, அட்லீ உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
திருமணத்துக்கு பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு விலக உள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அவர் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா மற்றும் கண்ணிவெடி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன. இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனால் புதிதாக அவர் எந்த படங்களிலும் கமிட் ஆகாததால் ஒரு வேளை சினிமாவை விட்டு கீர்த்தி விலகவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகி படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளார் என்று செய்திகள் வெளியானது. நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே கல்யாணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது அதே ரூட்டை கீர்த்தியும் பின்பற்றுகிறாரா என்கிற கேள்வி எழத் தொடங்கி உள்ளது.
கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி கல்யாண வைபோகம் சமந்தமான போட்டோக்களும் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அவருக்கு பலர் தங்களுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜயின் மேனஜரும், தயாரிப்பாளருமான ஜெகதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் குறித்து எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார்.
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ‘கடந்த 2015ம் ஆண்டு நானும், கீர்த்தியும் ஒருவரையொருவர் எவ்வளவு வெறுக்க முடியுமோ, அவ்வளவு வெறுத்துக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது அண்ணன் – தங்கையாக மாறியிருக்கிறோம். கீர்த்தி, நீ என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாகி விட்டாய். கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக உன்னுடைய கல்யாணம் சம்பந்தமாக பேசி திட்டமிட்டது, இப்போதும் எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது.
கடந்த 10 வருடங்களாக நாம் கண்ட கனவு தற்போது பலித்திருக்கிறது. என்னை விட்டால் யார் இந்த கல்யாணத்தில் அவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும். எனக்கு எப்போதுமே ஒரு நினைப்புண்டு. அது கீர்த்தியை திருமணம் செய்து கொள்பவர் மிகவும் அதிர்ஷ்ட சாலி என்று.. ஆனால் ஆண்டனியை பற்றி தெரிந்து கொண்ட பின்னர், நிச்சயமாக சொல்கிறேன்.. ஆண்டனியை திருமணம் செய்து கொண்டு கீர்த்திதான் அதிர்ஷ்டசாலியாக மாறியிருக்கிறார். வாழ்த்துகள்.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.