மலையாள திரைரையுலகை திகில் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. நீதிபதி ஹேமா கமிசன் அறிக்கை கேரளா சினிமாவின் இருட்டு பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. நடிகைகள் பலரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட செக்ஸ் தொந்தரவுகளை வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது பற்றி நடிகை பாவனா ஞாயிற்றுக்கிழமை ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் புரட்சியாளர் சே குவேராவின் மேற்கோள் ஒன்றை வெளியிட்டார். “எல்லாவற்றிற்கும் மேலாக, உலகில் எங்கும் யாருக்கும் எந்த அநீதியையும் ஆழமாக உணரும் திறன் கொண்டவராக இருங்கள்” – சே குவேரா, சமூக ஊடக தளங்களில் உடனடியாக இது பரவி வைரலானது.
இந்த நிலையில் வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா நடிகர்கள் ரஞ்சித், சித்திக் இருவர் மீதும் குற்றச்சாட்டை முன் வைத்தார். அதில் நான் ரஞ்சித்தின் ஒரு படத்தில் நடிக்கும் நடிக்கும் போது அவர் தனது கையை தடவி தனக்கு இணங்குமாறு கூறினா என்றார். அதே போல சித்திக் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த நிலையில் இருவரும் கேரளா நடிகர்கள் சங்கமான அம்மா என்ற அமைப்பிலிருந்து தங்கள் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தனர். இவர்களின் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதே போல சம்பந்தப்பட்ட திலீப்பை மீண்டும் அம்மா அமைபில் சேர்த்துக் கொள்ளபப்ட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் ரீமா கலிங்கல், ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உட்பட பல நடிகைகள் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மலையாள ஹிரோக்கள் முகேஷ், ஜெயசூர்யா ஆகிய இருவர் மீதும் கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகை ரேவதி சம்பத் இது பற்றி கூறும்போது, நான் ஜெயசூர்யாவோடு ஒரு படத்தில் நடிக்கும்போது ஜெயசூர்யா என்ன பின் பக்கமிருந்து இழுத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். நான் தடுத்தேன் எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் நல்ல பலனுண்டு என்று சொன்னார். அதே போல முகேசும் அன் அனுமதியில்லாமல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்று பெயர்களை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் கேரளா ரசிகர்கள் திகைத்துப் ,போயுள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், ஸ்பர்ஜன் குமார் தலைமையில் மூத்த பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய எஸ்ஐடி அமைக்க முடிவு செய்யப்பட்டது. குழுவில் எஸ் அஜீதா பேகம் (டிஐஜி), மெரின் ஜோசப் (எஸ்பி குற்றப்பிரிவு தலைமையகம்), ஜி பூங்குழலி (ஏஐஜி கடலோர போலீஸ்), ஐஸ்வர்யா டோங்க்ரே (கேரள போலீஸ் அகாடமி உதவி இயக்குனர்), அஜித் வி (ஏஐஜி, சட்டம் மற்றும் ஒழுங்கு), மற்றும் எஸ் மதுசூதனன் (எஸ்பி குற்றப்பிரிவு). சினிமா துறையில் பணிபுரியும் சில பெண்கள், சினிமா துறையில் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து பேட்டிகள் மற்றும் அறிக்கைகளுடன் வெளிவந்ததை அடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தை முதல்வர் விஜயன் நடத்தினார்.
இதன்படி அடுத்தடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தபப்ட்டுள்ளன. இனி யார் யார் பெயர்கள் வெளியாகுமோ என்று மலையாள ஊடகங்கள் உற்று நோக்கி வருகின்றன.