No menu items!

ஹீரோயின் ஆன அனிகா சுரேந்திரன்

ஹீரோயின் ஆன அனிகா சுரேந்திரன்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன், அஜித்தின் ’என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ படங்களில் மகளாக நடித்ததால் இங்கே சட்டென்று பிரபலமானார்.

கொரோனோ கொடுத்த இடைவெளியில் திடீரென ஹீரோயின் கெட்டப்பில் போட்டோகளை இணையத்தில் அள்ளிவிட்டார். இளமைத் துள்ளலுடன் எடுத்த போட்டோக்களுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளதால் அனிகாவின் அம்மா உற்சாகத்தில் இருக்கிறார்.

அனிகா குழந்தை நட்சத்திரம் அந்தஸ்தில் இருந்து ஹீரோயினாக இப்போது ப்ரமோஷன் ஆகியிருக்கிறார்.

ஆனால் அனிகாவை ஹீரோயினாக பார்த்து ரசிக்கப் போவது தமிழ் ரசிகர்களோ அல்லது ஏகே ரசிகர்களோ அல்ல.

மலையாளத்தில் அன்னா பென் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘கபெல்லா’வை தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலைகள் ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு அன்னா பென்னை போலவே சுட்டித்தனமாகவும், அழகாகவும் இருக்கும் ஒரு சிறிய பெண் ஹீரோயினாக வேண்டுமென திட்டமிட்டு இருக்கிறார்கள். ஹீரோயினை தேடிக்கொண்டிருந்த தயாரிப்பாளர் கண்ணில் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோகள் அகப்பட. எல்லாமும் சுபமாக முடிந்திருக்கின்றன.

’புட்ட பொம்மா’ என்று டைட்டிலும் வைத்துவிட்டார்கள்.

வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்

விஜய் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக நடிக்கும் படம் ’வாரிசு’.

இப்படத்தின் முதல் பாடல் தீபாவளியன்று வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால் ‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜூ, தமிழ் நாட்டில் கிளம்பிய எதிர்பார்பை அம்போவென கண்டும் காணாதது போல் விட்டு விட்டார். எதிர்பார்த்தபடி பாடல் வெளியாகவில்லை. ஒரு புதிய போஸ்டரோடு நிறுத்தி கொண்டார்கள்.

இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து இருப்பதாக அவரது ரசிகர் மன்ற தரப்பில் பேச்சு அடிப்படிகிறது.

‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங்கின் போதே தயாரிப்பாளருக்கும், விஜய் தரப்பிற்கும் லேசான உரசல் என்றும் ஒரு பேச்சு உலவுகிறது.

‘வாரிசு’ ஷூட்டிங்கின் போது சில காட்சிகள் மொபைல் போன்கள் மூலமாக எடுக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வெளியானது. ஷூட்டிங்கில் நடப்பது வெளியே கசியக்கூடாது என பவுன்சர்களின் பாதுகாப்புடன் நடைபெற்றது. ஆனாலும் காட்சிகள் வெளியாகின. இதில் விஜய் கொஞ்சம் கோபப்பட்டதாக கூறுகிறார்கள்.

அடுத்து இயக்குநர் வம்சிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக ஷூட்டிங் கொஞ்சம் தள்ளிப் போனது. இதனால் ரிலீஸ் தேதியில் குழப்பம் வர, இறுதியில் சொன்ன தேதியில் ‘வாரிசு’ வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது. இதிலும் விஜய் கொஞ்சம் அப்செட்.

இதனால்தான் படத்தின் ப்ரமோஷன் விஷயங்களிலும் தயாரிப்பாளர் தில் ராஜூ பெரிதாக ஆர்வம் காட்டவில்லையோ என்று விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள்.

காதாசிரியரானன திருமதி. தோனி!

‘தல’ தோனி அடுத்து சினிமாவில் களமிறங்கப் போகிறார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் அடிப்பட்டன.

இப்போது அதை தோனி உறுதி செய்திருக்கிறார்.

தோனியுடன் அவரது மனைவி சாக்‌ஷி சிங்கும் இணைந்து இந்தியாவின் முக்கிய மொழிகளில் படங்களைத் தயாரிக்க இருக்கிறார்.

இவர்களது முதல் தயாரிப்பை ‘அதர்வா – த ஆரிஜின்’ என்ற பெயரில் கிராஃபிக்கல் கதையை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தமிழில் தயாரிக்கப்பட உள்ளது. தமிழில் படம் தயாரானதும் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட முக்கிய இந்திய மொழிகளில் டப் செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதில் ஹைலைட்டான முக்கிய அம்சம் என்னவென்றால் திருமதி தோனி கதை எழுத இருக்கிறார் என்பதே.

படத்தின் டைட்டில், யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று தோனி என்டர்டெயின்மெண்ட் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...