No menu items!

தெலுங்கு சினிமாவிற்கும் பரவும் செக்ஸ் குற்றச்சாட்டு

தெலுங்கு சினிமாவிற்கும் பரவும் செக்ஸ் குற்றச்சாட்டு

மலையாள திரையுலகத்தை நோக்கி எழுந்திருக்கும் செக்ஸ் குற்றச்சாட்டு மெதுவாக ஒவ்வொரு மொழி சினிமாவுக்கும் பரவி வருகிறது.  இது குறித்து பேசும் பிரபலமான நடிகைகள் பலரும் ஏன் தமிழ் சினிமாவிலும்தான் இருக்கிறது. யாரும் சொல்ல முன் வரவில்லை என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக நடிகை ஷகிலா,சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் வெளிப்படையான குற்றத்தை நடிகர்கள் மீது சுமத்துகிறார்கள். அதுவும் சாந்தி வில்லையம்ஸ் நடிகர் மோகன்லால் மீது பகிரங்கமாக சொல்லும் புகார்கள் அதிர்ச்சியூட்டுபவையாக இருக்கிறது.

சமீபத்தில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனிடம் இது குறித்து மீடியாக்கள் கேட்டபோது தமிழ் சினிமா குறித்து இதுவரைக்கும் புகார்கள் எதுவும் வரவில்லை. அப்படி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் இந்த விவகாரம் புகைய ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே நடிகை ராதிகா ஆப்தே பாலகிருஷ்ணா பற்றி பேசியிந்தார். இன்னும் சில முன்னணி நடிகர்கள் பலர் மீது மறைமுகமான குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கும் சூழலில், மலையாள சினிமாவின் கமிசன் போல தெலுங்கு சினிமாவில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை என்ன ஆனது என்ற பேச்சு இப்போது எழுந்திருக்கிறது. 

இந்த விசாரணை அமைப்பு நடத்திய விசாரணையை விரைவில் வெளியிட வேண்டும் என்ற இந்த குரலுக்கு முதல் ஆளாக நடிகை சமந்தா ஆதரவு கொடுத்திருக்கிறார். இது பற்றிய அவரது இன்ஸ்டா தள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசுக்கு நடிகை சமந்தா வலியுறுத்தி இருக்கிறார். தெலுங்கு திரையுலகில் இருந்து இதுதொடர்பாக குரல் கொடுத்த முதல் நடிகை சமந்தா தான். அந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமையும் என நடிகை சமந்தா கூறி இருக்கிறார்.

நடிகை சமந்தாவின் இந்த பதிவின் மூலம் விரைவில் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தெலுங்கு திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்காக தி வாய்ஸ் ஆஃப் உமன் என்கிற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் சமந்தாவும் இடம்பெற்று இருக்கிறார். அந்த குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை தான் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பாலகிருஷ்ணா பற்றி நடிகை விசித்ரா சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி ஒவ்வொருவராக தனித்தனியாக சொன்ன குற்றச்சாட்டு இன்று ஒட்டு மொத்த பெண்களின் குரலாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தெலுங்கு சினிமாவின் ஹீரோக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

தெலுங்கு சினிமாவில் எப்போதும் நான்கு குடும்பங்களின் ஆளுமைதான் அதிகமாக இருக்கும். இதனால் அங்கு திரைப்படங்களின் வெற்றியும், வியாபாரமும் இவர்களால்தான் முடிவு செய்யப்படுகிறது. இதனால் அங்கு ஒரு படத்தின் திருட்டு விசிடிகள் கூட வெள்யாகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இந்தக் குடும்பங்களின் உறுப்பினர்கள் ஹீரோவாக அறிமுகமாகும் போது அனைவரின் ஆதரவோடு அந்தப்படத்திற்கு சலுகைகள் கிடைக்கும். ஆனால் இன்றைக்கு எழுந்திருக்கும் செக்ஸ் குற்றச்சாட்டை எப்படி இந்த  தெலுங்கு ஆளுமைகள் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...