No menu items!

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! – ஸ்டாலின்

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! – ஸ்டாலின்

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என காமராஜருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படுகிறது. மேலும், காமராஜரின் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று.

அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

கல்வி வளர்ச்சி நாள்: காமராஜரின் பிறந்தநாள் ‘கல்வி வளர்ச்சி’ நாளாக இன்று கொண்டாடப்படுகிறது. எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது என்று கேட்டவர்கள் இருந்த காலக்கட்டத்தில் கல்விப் புரட்சியை நிகழ்த்தியவர் காமராஜர். 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் முதல்வராக காமராஜர் நீடித்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் கல்வியில் தனிக் கவனம் செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...