வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ் `திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு திரைப்படத்தின் ட்ரைலருக்கே இத்தனை விவாதங்கள் எழுந்திருப்பது இதுதான் முதல் முறை. ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியானபோது கூடவே பாடல்கள் எதுவும் சரியில்லை என்று ஒரு பக்கம் ரசிகர்கள் புலம்பியது நடந்தது.
ஆனால் இதற்கு பதிலாக யுவன் பேசியது அவர் அது பற்றி அலட்டிக்கொள்ளாததைக் காட்டியது. எல்லா பாடல்களையும் போலதான் இந்த பாடல்களையும் நான் பார்க்கிறேன் என்றார். இந்த நேரத்தில் வெளிவந்த ட்ரைலர் ரசிகர்களின் குறையை தீர்த்து வைத்திருக்கிறது என்றே தெரிகிறது. படத்தின் பின்னணி இசையில் யுவன் கலக்கியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
இந்தியாவின் ரா உளவுப்பிரிவில் பணியாற்றிய 4 அதிகாரிகள் ஒரு ஆப்ரேஷனில் பங்கெடுக்கிறார்கள். இதன்பிறகு அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் நடத்திய ஆப்ரேஷனால் பாதிக்கப்பட்ட வில்லன் குமபல் அவர்களை பழி வாங்கக் காத்திருக்கிறார்கள். இந்த சிக்கலிலிருந்து 4 நண்பர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் எடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
இதில் மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அதிரடியான இந்த காட்சிகள் ட்ரைலரில் பரபரப்பாக இருக்கிறது. அதோடு சண்டையில் சில ஐடியாக்களுக்காக ஹாலிவுட்டில் வெளியான ஜெமினி மேன் என்ற திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். இது பற்றி பத்திரிகையாளர் கேட்டத்தற்கு எனக்கு ஜெமினி மேன் திரைப்படம் பிடித்தப்படம் ஆனால் விஜய் படத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் சந்திக்கும் காட்சிகளும் ட்ரைலரில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தில் அஜித் பேசியிருக்கும் வசனத்தை விஜய் பேசும் இடங்களில் ட்ரைலர் வெளியிடும் தியேட்டர்களில் ஆரவார கூச்சல் கேட்கிறது. இந்த ட்ரைலரை அஜித்தும் பார்த்து ரசித்து வெங்கட்பிரபுவை பாராட்டியிருக்கிறார். இதுதான் இப்போது விஜய் ரசிகர்களுக்கு உற்சாக டானிக்காக மாறியிருக்கிறது.
அதோடு விஜய்யின் பெயர் காந்தி என்று வந்திருப்பது வேறு சிலரையும் கோபப்படுத்தியிருக்கிறது. காந்தி என்று பெயர் வைத்துக் கொண்டு படத்தில் அவர் குடிப்பதைப் போன்ற காட்சியை வைக்கலாமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். வெங்கட் பிரபுவோ என்னுடைய காந்தி என்று பெயர் வைத்தாலே எதுவும் செய்யக்கூடாது என்பது அர்த்தம் இல்லை என்றார்.
அதே போல அவரது இள வயது முகத்திற்காக செய்யப்பட்ட ஏஐ ரசிக்கும்படியாக இல்லை என்றும் ஒரு பக்கம் பேசபப்ட்டது. இது குளோசப் காட்சிகளில் மட்டும்தான் அப்படி தெரியும் என்று ரசிகர்கள் தங்களுக்குள் சமாதானம் ஆகிறார்கள்.