நடிகர் அஜித்தின் விட முயற்சி படம் வெற்றிகரமாக படப்பிடிப்பு முடிந்திருகிறது. இறுதி நாளில் படக்குழுவினரோடு அஜர்பைஜானில் ஸ்பாட்டில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார் அஜித். இந்த படம் இணையத்தில் வைரலாகி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் விமான நிலையத்தில் வந்தபோது பயணிகள் சிலர் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டனர். இதை தெரிந்து கொண்ட அஜித் அவராகவே போய் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அஜித்தின் இந்த குணத்தை ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி மகிழ்கிறார்கள்.
அஜித்தின் படங்களில் காட்சியமைப்புகள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் வையில் இருப்பதற்கு முக்கிய காரணமே அஜித் இயக்குனர்களுக்குக் கொடுக்கும் ஐடியாதான். சில படங்களின் காட்சிகளைக் காட்டி இது போல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்வார் பிறகு இயக்குனர்கள் அவர் சொன்ன காட்சிகளை விட அதிக பிரமாண்டத்தைக் காட்டுவார்கள். இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த அஜித் செய்யும் ஒரு டெக்னிக். இதையே அவரது சமீப படங்களில் பார்த்து வருகிறோம்.
இந்த பிரமாண்ட காட்சிகளை சிந்திக்கும் இயக்குனரோடு பணியாற்றவே விரும்புகிறார். அப்படி அவருக்குப் பிடித்த இயக்குனராக தற்போது இருப்பது பிரசாந்த் நீல் என்கிறார்கள். அவர் இயக்கிய கே.ஜி.எஃப். திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்த படமான சலார் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையென்றாலும் நல்ல வசூலைக் கொடுத்தது. பிரமாண்டம் பற்றி ரசிகர்கள் வியந்து பாராட்டினார்கள்.
பிரசாந்த் அடுத்த படம் பற்றிய கதை விவாதத்தில் இருக்கிறார். இந்த நிலையில் அஜித் அவருக்கு போனில் பேசியிருப்பதாக தெரிகிறது. தனக்கான ஒரு கதை இருந்தால் சொல்ல கேட்டிருக்கிறார்,. அப்போதைக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார் பிரசாந்த். இருவரும் இணைய இருப்பதாக தகவல் வந்ததிலிருந்து அஜித் ரசிகர்கள் குஷியாகி இருக்கிறார்கள் என்பதை இணையத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது. அஜித்தின் 64 வது படம் இது. வழக்கம்போல் ஹொம்பாலே பிலிம்ஸ் கிரந்தூர் தயாரிக்க இருக்கிறார். இதில் சர்ப்பரைஸ் என்னவென்றால் 64, 65 என்று இரண்டு படங்களையும் பிரசாந்த் நீலே3 இயக்க இருக்கிறார் என்பதுதான். இன்னொரு பக்கம் இது வதந்தி என்ற பேச்சும் ஓடுகிறது. ஆனல் சினிமாவில் மகிழ்ச்சியான தகவலை யாராலும் தடுக்க முடியாதே.
இந்த நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினிக்கு ஸ்பெஷலாக ஒரு காரை வாங்கி பரிசளித்திருப்பதாக தெரிகிறது. திரையுலகில் முன்னணி இடத்தில் இருந்தாலும் அஜித் தாகமெல்லாம் காரும்உஅலக பந்தயமாகத்தான் இருக்கிறது. அட்வான்ஸ் ரக கார்கள் உலகில் வந்தாலும் அதைப்பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்.