No menu items!

பேரவைத் தலைவர் மீது அதிமுக தீர்மானம்

பேரவைத் தலைவர் மீது அதிமுக தீர்மானம்

உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே பேரவைத் தலைவர் மீது அதிமுக தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

“ஆட்சியின் மீது குறை சொல்ல முடியாதவர்கள் – உட்கட்சிப் பிரச்சினைகளைத் திசைதிருப்ப நினைத்தவர்கள், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்! கடந்த ஆட்சிக்காலத்தைப் போல் அல்லாமல், நடுநிலைமையோடு பேரவையை வழிநடத்திடும் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை வைத்து, எதிர்க்கட்சியின் தீர்மானத்தைப் பேரவை நிராகரித்தது!
” என்று பதிவிட்டுள்ளார்.

அதிமுக தீர்மானம் தோல்வி!எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிக நேரம் பேச அனுமதிப்பதில்லை, தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்தில்லை, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பேரவைத் தலைவரே பதிலளிக்கிறார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை வைத்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் இன்று கொண்டுவந்தார்.

இந்த தீர்மானம் விவாதத்துக்கு வந்த நிலையில், பேரவையைவிட்டு அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவைக்கு தலைமையேற்று வழிநடத்தினார்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக, பாமக உறுப்பினர்கள் பேரவைக் கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளவில்லை.

விவாதத்தின் இறுதியில் பேசிய முதல்வர், ”என் தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாமல் நடுநிலையோடு பேரவை வழிநடத்தி வருபவர் அப்பாவு” எனத் தெரிவித்தார்..தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தீர்மானம் தோல்வியடைந்தது. தொடர்ந்து, எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று டிவிஷன் முறையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும், தீர்மானம் தோல்வி அடைந்ததாக பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி அறிவித்தார்.

தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 154 வாக்குகளும் பதிவானது. இதையடுத்து, மீண்டும் பேரவைக்கு வந்த அப்பாவு, பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...