No menu items!

ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் – திருமாவளவன் அறிவிப்பு

ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் – திருமாவளவன் அறிவிப்பு

ஆதவ் அர்ஜுனாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி.க துணை பொதுச் செயலாள்ர் ஆதவ் அர்ஜுனா, 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமாவளவன் வராவிட்டாலும் அவருடைய மனசாட்சி இங்கேதான் இருக்கும் என்று பேசினார். மேலும், புத்தகத்தை வெளியிட்ட நடிகர் விஜய், தி.மு.க அரசை விமர்சித்துப் பேசினார். திருமாவளவன் இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்று கூட்டணியி கட்சியில் இருந்து எந்த அளவுக்கு அழுத்தம் வந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. அதே நேரத்தில், அவருடைய மனது இங்கேதான் இருக்கும் என்று கூறினார்.

அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில். வி.சி.க பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, கூட்டணியின் தலைமைக் கட்சியான தி.மு.க-வினர் இடையே அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வி.சி.க தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் தொல் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...