சினிமாவில் பலர் இயக்குநர் ஆகவேண்டுமென்ற வெறியோடு இருப்பார்கள். அதில் சிலர் விடாமுயற்சியால் இயக்குநராகியும் விடுவார்கள். காலப்போக்கில் நடிகராகவும் அவதாரம் எடுப்பார்கள். இந்த விஷயத்தில் இன்னும் பலர் அப்படி தலைக்கீழாக இருப்பார்கள். இயக்குநராக ஏழெட்டு படங்கள் எடுத்து, கமர்ஷியல் இயக்குநர் என்று பெயரும் எடுத்துவிடுவார்கள். அப்புறம் டைரக்ஷனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு முழுநேர நடிகராக மாறிவிடுவார்கள்.
இந்த இரண்டாவது வகையறாவைச் சேர்ந்தவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் இயக்குநராக பெயரெடுத்ததே ஒரு ஹீரோவாக நடிக்க வேண்டுமென்ற வெறியில்தான். பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். வாய்ப்புகளும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
இதைப் பார்த்துதான், தனது மனதில் பட்டதை பொதுவெளியில் கொட்டியிருக்கிறார் நிலா. அதாவது எஸ்.ஜே. சூர்யாவினால் ‘நியூ’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மீரா சோப்ரா.
’நியூ’ படத்திற்குப் பிறகு இவருக்கும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தன. தமிழில் இருந்து தெலுங்கு சினிமா பக்கமும் போனார். ஹிந்தியில் முயற்சி செய்தார். பலன் கிடைக்கவில்லை.
இதனால் கையில் கொண்டு வந்த ட்ராலியோடு, திரும்பவும் மும்பைக்குப் போய்விட்டார். மும்பையில் இருந்தவர் இன்ஸ்டாக்ராமில் பிஸியானார்.