இந்த ஆண்டின் விஜய் பிறந்த நாள் பரபரப்பான கட்டத்தில் நடந்திருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த சோக சம்பவத்தையொட்டி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விட்டதோடு வழக்கமாக தனது நீலாங்கரை வீட்டுக்கு அருகில் நடக்கும் கொண்டாட்டங்களுக்கு தடை போட்டிருக்கிறார் விஜய். ஆனால் ரசிகர்களின் உற்சாகத்திற்கு ஒரு நாளும் தடை போட முடியாது என்பதால் காலை முதலே விஜய்யின் வீட்டுக்கு முன்பாக ரசிகர்கள் கூட்டம் கூடி அவரை பார்க்க காத்திருந்தார்கள். அவர் வீட்டை விட்டு வெளியே வரும் வரை அவருக்கு வாழ்த்து கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
எப்போதும் போல் இல்லாமல் இந்த ஆண்டு விமர்சையாக கொண்டாடவே திட்டமிட்டர்களாம் விஜய் மன்றத்தினர். இதற்காக பல்வேறு ஊர்களில் விழாக்களும், நலத்திட்ட உதவிகளையும் செய்யத்தயாராக பல ஏற்பாடுகள் செய்ய இருந்தனர். இதற்கெல்லாம் தடை போடுவது போல் சோக சம்பவம் நடந்து விட்டது. அந்த திட்டங்களில் ஒன்று விஜய்யின் தங்கை வித்யா பெயரில் பள்ளிக் குழந்திகளுக்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் இருந்திருக்கிறது. விஜய் தனது தங்கை வித்யா மீது மிகவும் பிரியமாக இருப்பவர். சிறிய வயதில் அவருக்கு காய்ச்சல் வந்து காப்பாற்ற முடியாமல் உயிரிழந்தது இன்னும் அவரை வருதத்தில் ஆழ்த்தி வருவதை பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அதனை தெரிந்து கொண்ஏ ரசிகர்கள் சிலர் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். இதனை கேள்விபட்டு விஜய் நெகிழ்ந்து போனாராம். அனாகமாக சில நாட்கள் கழித்து இந்த அறக்கட்டளையை விஜய் தனது கையாலேயே தொடங்கி வைப்பார் என்கிறார்கள். அப்படி உதவி பெறும் முதல் குடும்பமாக கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கபப்ட்ட குடும்பத்தினர் இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
இதே போல கிராமங்கள்தோறும் நூலகங்களை திறக்க விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடுகளை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நூலங்கள் திறப்பது என்ற இந்த ஏற்பாடு கட்சியா அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அப்படியே நின்று போனதாம். அதனை இந்த பிறந்த நாளில் கோலாகலமாக கொண்டாடி திறக்க திட்டமிட்டனர் ரசிகர்கள். இந்த நிகவுகளும் இன்னொரு நாளுக்கு தள்ளிப் போயிருக்கிறது.
இன்னும் சில நிகழ்வுகளும் இதே போல வேரு ஒரு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. தி கோட் படம் வெளியாகும் போது இந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நடத்தலாம் என்கிறார்கள். அல்லது பாடல் வெளியிட்டுவிழா மேடையில் இதற்கான அறிவிப்பை விஜய் வெளியிடலாம் என்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் திட்டங்கள் இப்படி இருக்க இன்னொரு பக்கம் அவரது திரைப்படங்களின் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பலவித விவாதத்தை கிளப்பியிருக்கிறது. விஜயகாந்த் ரசிகர்களை கு்ளிர்விக்கும் விதமாக படத்தில் சில காட்சிகள் ஏ.ஐ தொழில்நுட்பதில் வைக்கப்பட்டுள்ளதாம். இதன் மூலம் அவர்களை தன் பக்கம் ஈர்க்கலாம் என்ற திட்டமாம். இந்த படத்திற்கு பிறகு வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் முழுக்க அரசியல் பேச இருக்கிறார் விஜய். இதனால் காட்சிகளை பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவால் இயக்குனர் வினோத் முழு ஸ்கிரிப்டையும் தனியாக எழுதி விஜய்யிடம் காட்ட இருக்கிறார் .காரசாரமான அரசியல் கருத்துக்களோடு தயாராகும் இந்தப்படம் விஜய்யின்ன் அரசியல் கட்சிக்கு பலமாக இருக்கும் என்கிறார்கள்.
தனது 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை தனது அடுத்தடுத்த படங்களில் விஜய் காட்டப்போகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.