No menu items!

விடா முயற்சி போஸ்டர் – அஜித் ரசிகர்களுக்கு நிம்மதி!

விடா முயற்சி போஸ்டர் – அஜித் ரசிகர்களுக்கு நிம்மதி!

அஜித்தின் விடா முயற்சி போஸ்டர் வெளியானதிலிருந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தை இணையத்தில் பார்க்க முடிகிறது. படம் வெளியாகுமா என்கிற சூழலிலிருந்து மீண்டு வந்ததே அவர்களுக்கு நிம்மதி.  சண்டைக்காட்சிகளில் ஒரு சில கடினமான காட்சிகளை  மீண்டும் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் ம்கிழ் திருமேனி சொன்னவுடன் அஜித்திற்கு ஷாக்.  படம் முடங்கி விடக்கூடது என்பதால் அஜித் உடனே அஜர்பைஜானுக்கு சென்றார்.  அங்கிருந்து சண்டைக்காட்சிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட போது அந்தரத்தில் பல்டியடித்த ஜீப். அஜித் உட்கார்ந்திருக்கும் விதம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. அதில் அஜித் கையில் ஒரு பேக்கை வைத்துக் கொண்டு நீண்ட சாலையில் நடந்து வருவது போன்ற  ஸ்டில் பரபரப்பை கிளப்பியது. அஜித் ரசிகர்கள் பலரும் இதை வைரல் செய்து பரப்ப,  ஒரு சிலர் மீம்ஸ்கள் மூலம் கலாய்க்கவும்  ஆரம்பித்திருக்கிறார்கள்.  தொலைக்காட்சி தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகி தமிழகம் முழுவதும் ஊர் ஊராக அலைந்து வருவது போல கதை வைக்கப்பட்டிருக்கும் அதற்காக அவரை கையில் பேக்குடன் செல்லும் புகைப்படத்தை போட்டு பக்கத்தில் விடாமுயற்சி படத்தையும் போட்டு  கேலி செய்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு அஜித்திற்கு இது போன்ற எதிர்ப்பு வந்ததில்லை.  கடுமையான எதிர்ப்பை சந்திப்பது சமீகாலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பின்னால் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. அது உண்மை என்பது போல சமீபத்தில் நடந்த விஜய் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்களை அவருக்கு எதிராக திருப்பி இணையத்தில் அதிக அளவில் வைரல் செய்து வருகிறார்கள். இது அஜித் ரசிகர்கள் செய்யும்  வேலை என்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் இப்படி மோதிக்கொள்ளும் போக்கு விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து தான் அதிகரித்திருக்கிறது என்பது சிலரின் கருத்து.. காரணம்   துணிவு படத்தின் போது விஜய் ரசிகர்கள் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்திருந்தது பலராலும் பாராப்பட்டது. அதே போல விஜய் படம் வெற்றி பெறவும் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்ததும் நடந்தது. இந்த அமைதியான , நாகரீகமான சூழலை கெடுப்பது போல நடவடிக்கை எங்கிருந்து தொடங்கியது என்பதுதான் பலரின் கேள்வி.

அதற்கு ஒரே பதில் விஜய் அரசியல் கட்சியை அறிவித்த பிறகுதான் இந்த மோதல் போக்கு தொடங்கியிருக்கிறது. இதைச்செய்வது அஜித் ரசிர்கள்தான் என்பதை சரியாக சொல்ல முடியாத நிலையில் அவர்கள் மீது குற்றம் சுமத்தவும் முடியாது. அப்படியானால் விஜயின் அரசியல் வருகை பிடிக்காத யாரோ சிலர் இடையில் புகுந்து அஜித் பெயரில் இப்படியான மோதலை உருவாக்குகிறார்கள்  என்கிற பார்வை எழுந்திருக்கிறது. இதில் அரசியல் தலைகளும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். விஜய்யின் நேரடி அரசியல் பேச்சு இதற்கு காரணமாக அமைந்திருக்கும்.  ஆனால் அடிபடுவது அஜித் ரசிகர்கள் பெயராக இருப்பதுதான் கவனிக்க வைக்கிறது.  இது சமீபகாலமாக அஜித் ரசிகர்களுக்குள் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உஷாராகியிருக்கிறார்கள்.

இரண்டு முன்னணி கதாநாயகர்களின் ரசிகர்களுக்குள் புகுந்திருக்கும் அந்த அரசியல் கருப்பு ஆடு யார் என்பதை இரு தரப்பு ஐடி விங் ஆட்களுமே தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆடு சிக்குமா?

– தேனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...