ஏப்ரல் 13-ல் பீஸ்ட் ரிலீஸ்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ம் தேதி ‘பீஸ்ட்’ திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி – மாநிலங்களவை தள்ளிவைப்பு
சமையல் எரிவாயு, டீசல் போன்ற பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து அமளி ஏற்பட்டது.
இந்த அமளியினால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக ஆஜர்
நேற்று நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
இன்று மீண்டும் அவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜாரகியுள்ளார். இன்றும் அவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்.
நேற்று கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் எனக்குத் தெரியாது என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டும் போதாது; நுழைவுத் தேர்வு அவசியம்: யுஜிசி அறிவிப்பு
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பிளஸ் 2 மதிப்பெண் மட்டுமே போதாது சியுஇடி (CUET) எனப்படும் மத்திய பல்கலைக்கழக தகுதித் தேவு எழுதி தேர்ச்சி பெற வேண்டு என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12 ஆம் வகுப்பு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மதிமுகவை கலைக்க வேண்டும். திமுகவுடன் இணைக்க வேண்டும்: வைகோவுக்கு எதிராக 3 மாவட்டச் செயலாளர்கள்
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் புலவர் செவந்தியப்பன் (சிவகங்கை), சண்முகசுந்தரம் (விருதுநகர்), செங்குட்டுவன் (திருவள்ளூர்) ஆகியோர் சிவகங்கையில் மதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தைக் கூறினார்கள்.
’வைகோ கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறார். திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாகக் கூறித்தான் திமுகவில் இருந்து மதிமுக பிரிந்தது. ஆனால் இப்போது மகனை கட்சிக் கொள்கைக்கு விரோதமாக துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். இந்த நியமனத்துக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு இருக்கிறது. மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்’ என்று குறிப்பிட்டார்கள்.