மாமனிதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது. இயக்குநர் சீனுராமசாமி கொந்தளித்துப் பேசினார்.
”2017 ஆம் ஆண்டு துவங்கிய மாமனிதனின் தொடக்கம் சுமார் ஐந்தாண்டுகள் வரை நீடித்தது. அதற்கு காரணம் பாதி கொரோனாவாக இருந்தாலும் கூட மீதி படம் காலதாமதமாக வர முழுக்க முழுக்க இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான். யுவன் ஒரு நல்ல இசையமைப்பாளர் ஆனால் அவருக்கு புரொடக்ஷன் பார்க்க சுத்தமாக தெரியவில்லை. யுவனுடன் இருக்கும் சக நண்பர்கள் தான் அவரை கெடுக்கிறார்கள். மாமனிதன் இத்தனை ஆண்டுகாலம் தாமதமாக வர இவர் பெரிய காரணம்.
இளையராஜாவை நான் முழுமையாக மதிக்கிறேன் அவர் என் கனவு உலகின் தூதர் ஆனால் அவர் என்னை நிராகரித்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை நான் மிகவும் நேசித்த மனிதருடன் சேர்ந்து பணியாற்றும்போது அதில் கிடைக்கும் சந்தோஷம் அலாதிதான், ஆனால் நான் மட்டும் அப்படி நினைத்தால் போதாது இளையராஜாவும் நினைக்க வேண்டும். என்னுடைய படத்திற்கு நான் இல்லாமல் பாடல்களுக்கு இசையமைத்ததும், படத்திற்கு ரீரெகார்டிங் செய்ததும் மிகவும் வேதனை அளிக்கிறது. அதைவிட கொடுமை என்னை நிராகரித்தது தான். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றும் படங்களுக்கு பாடல் மற்றும் பின்னனி இசைக்கு நான் அவருடனே அவர் ஸ்டியோவில் இருப்பேன் இதற்கு அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே நான் அவரும் பணியாற்றுவேன்.
எனக்கு முழு ஆக்கமும் ஊக்கமும் அளித்த விஜய்சேதுபதி மற்றும் நண்பர் ஆர்.கே.சுரேஷ்க்கு நன்றி. நான் எப்போதும் கதையை எழுதிய பிறகு அதை கொண்டு போய் ராமவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் வீட்டில் வைத்து விட்டு தான் படப்பிடிப்பை ஆரம்பிப்பேன், ஆனால் மாமனிதன் கதையை தயார் செய்த பிறகு அதை கொண்டு போய் போக் ரோட்டில் உள்ள அன்னை இல்லத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்தேன். சிவாஜின் நடிகர் திலகத்தின் பாதி பெயரை வாங்க வேண்டும்” என்று உணர்ச்சி ததும்ப கூறி மேடையில் கண்கலங்கினார்.