No menu items!

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி

மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் தனித்து நிற்கிறது.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் பெங்களுர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், அமராவதி, கொச்சி ஆகியநகரங்களை மட்டுமே நம்பி உள்ளன.

ஆனால் தமிழ்நாடு மட்டும் சென்னையை மட்டுமே நம்பியே பொருளாதாரம் கிடையாது.  பரவலான வளர்ச்சி தமிழ்நாட்டில் சாத்தியமானது எப்படி, மற்ற மாநிலங்களில் தலைநகரை தவிர மற்ற பகுதிகளில் வளர்ச்சி ஏன் பெரிதாக பரவவில்லை என்பதை பார்ப்போம்.

இந்தியாவை பொறுத்தவரை மற்ற தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் உண்மையிலேயே தனித்து நிற்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை து வெறும் சென்னையை மட்டும் சார்ந்திராமல், பரவலான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த பரவலான வளர்ச்சி சாத்தியமானதற்கும், மற்ற மாநிலங்களில் தலைநகரம் சார்ந்த வளர்ச்சி இருப்பதற்கும் உள்ள முக்கியக் காரணங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி பரவலாக இருப்பதற்கு வரலாற்றுக் காரணங்களும், அரசு கொள்கைகளும்தான் முக்கியம்:

தமிழ்நாட்டில் சென்னையை தவிர தூத்துக்குடி மற்றும் எண்ணூர் (காமராஜர் துறைமுகம்) போன்ற துறைமுகங்கள் இருக்றிது. இது தவிர, கோயம்புத்தூர்-திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற உள்நாட்டு உற்பத்தி மையங்கள் இருக்கின்றன. இந்த நகரங்கள் ஜவுளி ஏற்றுமதிக்கு கொச்சி மற்றும் தூத்துக்குடியைப் பயன்படுத்துகின்றன. இது மொத்த கனரக வாகனங்களும் கண்டய்னர்களுடன் சென்னைக்கு தொலைதூரம் வரவேண்டிய நிலையை குறைத்துள்ளது.. இது முக்கியமான ஒரு புவியியல் காரணம்.

தமிழ்நாட்டில் இயற்கையாகவே உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை தவிர, கோயம்புத்தூர் (மோட்டார் பம்ப், ஜவுளி, இன்ஜினியரிங்), திருப்பூர் (ஆயத்த ஆடைகள்), சேலம் (ஜவுளி, இரும்பு), சிவகாசி (தீப்பெட்டி, அச்சகம்), மற்றும் திருநெல்வேலி (காற்றாலை), தூத்துக்குடி(துறைமுகம்), நாமக்கல் (முட்டை, கறிகோழி, லாரிகள்), கரூர் (ஜவுளி, வாகன பாடிக்கட்டும் தொழில்) போன்ற பல்வேறு நகரங்கள் நீண்டகாலமாகவே பல்வேறு தொழில்களில் முன்னிலையில் உள்ளன. தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பிரத்யேகமாக தொழில்கள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...