கடைசி உலகக் கோப்பை என்பதை உணர்ந்ததால், இருபெரும் ஜாம்பவான்களும் தங்கள் வேற்றுமைகளை மறந்து கைகோர்த்தனர். இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமில் இதனால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
படைப்பாளிகளின் மீது பாமர ரசிகன் வைத்திருக்கும் பிம்பம் வெறும் மாயை என்ற சூழலைத் தவிர்க்க பொய்யான பப்ளிசிட்டிக்கும், பில்டப்புக்கும் இனியாவது முக்கியத்துவம் கொடுக்காமல் கோலிவுட் இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
கொலையாளியைப் பிடிக்கும் பொறுப்பை மம்முட்டி தலைமையிலான கண்ணூர் ஸ்குவாட் போலீஸிடம் ஒப்படைக்கிறார்கள். கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு போய் அவர்கள் எப்படி கொலைகார்ர்களைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை.
‘சுரங்க வழியை அடைத்தபடி கிடக்கும் அந்த குப்பைக்கூளத்தில் கான்கிரீட்டும், இரும்பு உத்தரங்களும், பலவிதமான இயந்திரங்களும் கூட புதையுண்டு கிடக்கின்றன. அதனால் தான் ஆனானப்பட்ட ஆகர் இயந்திரமே திணறுகிறது’ என்கிறார்கள் மீட்புப்படையினர்.
தன் மகன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் திமுக தரப்பில் எதிர்ப்பு சொல்லக் கூடாது என்று திமுக தலைமையிடம் சொல்ல வேண்டும் என்று வைரமுத்துவிடம் வேண்டுகோள் வைத்ததாக காங்கிரஸ்காரர்கள் கிசுகிசுக்கிறார்கள்.