அதன்படி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டதும் காரை விட்டு இறங்கிய அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, கௌதம சிகாமணி மூவரும் இறங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், , கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.