No menu items!

சவால்களை சமாளிப்பாரா ஜடேஜா

சவால்களை சமாளிப்பாரா ஜடேஜா

 

“ஐபிஎல் போட்டியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் 2022-ம் ஆண்டில் கட்டமைக்க இருக்கிறோம்” என்று கடந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் கூறினார் தோனி.

இந்த திட்டப்படிதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியிருக்கிறார். தான் அணியில் இருக்கும்போதே ஜடேஜாவை கேப்டனாக்கியுள்ள தோனி, இந்த தொடரில் அவருக்கு ஆலோசனைகளைக் கூறி வழிநடத்த உள்ளார். இந்தச் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்….

நிரப்ப முடியாத வெற்றிடம்:

ரவீந்திர ஜடேஜா சந்திக்கும் முதல் சவால், மகேந்திர சிங் தோனிக்கு நிகராக அவரால் செயல்பட முடியுமா என்பதுதான். ஐபிஎல் ஆரம்பித்த காலம் முதல், அதாவது 2008-ம் ஆண்டுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் தோனி. அவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

மற்ற அனைத்து முறையும் சென்னை அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார் தோனி. 4 முறை கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.

இப்போது தோனிக்கு பதில் கேப்டனாக பொறுப்பேற்கும் ஜடேஜாவும் இதேபோல் செயல்பட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தோனிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற கோலிக்கும் இதே சிக்கல் இருந்தது. தோனிக்கு நிகராக சாதிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை கோலியால் நிறைவேற்ற முடியவில்லை. தோனி வகித்த பதவி என்பதே இவர்களுக்கு பெரிய சுமை. தோனியுடன் ஒப்பிட்டுப் பார்த்து எடை போடுவதை எப்படி கடக்கப் போகிறார் என்பதே பெரிய கேள்வி.

பலவீனமான பந்துவீச்சு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு போதிய பந்துவீச்சாளர்கள் இல்லை. ஏற்கெனவே ஏலத்தின்போது ஷர்துல் தாக்குரை வாங்காமல் விட்டுவிட்டார்கள். இந்த நேரத்தில் அதிக பணம் கொடுத்து வாங்கிய தீபக் சாஹரும் காயத்தால் முதல் சில போட்டிகளில் ஆடமுடியாத நிலை உள்ளது. ஆல்ரவுண்டரான மொயின் அலியும் விசா சிக்கலால் முதல் போட்டியில் ஆடமாட்டார் என்கிறார்கள். இதனால் மிகவும் பலவீனப்பட்டு இருக்கும் பந்துவீச்சை வைத்து எதிரணிகளை சமாளிப்பது ஜடேஜாவுக்கு கொஞ்சம் சிக்கல்தான்.

ணி தேர்வு:

என்னதான் வெற்றிகரமான கேப்டனாக இருந்தாலும் அணி தேர்வை பொறுத்தவரை மகேந்திரசிங் தோனி கடந்த காலங்களில் கொஞ்சம் சொதப்பியுள்ளார் என்பதும் உண்மை.

மூத்த, அனுபவம் வாய்ந்த வீரர்களை நம்பும் தோனி, இளம் வீரர்களை அதிகமாக நம்புவதில்லை. அதனால் மூத்த வீரர்கள் என்னதான் சொதப்பினாலும் அவர்களுக்கே மீண்டும் வாய்ப்புகளை வழங்கினார்.

அவர் செய்த அதே தவறை ஜடேஜாவும் செய்யக்கூடாது. தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகிய முக்கிய வீரர்களை மட்டும் அணியில் நிரந்தரமாக வைத்துக்கொண்டு, மற்ற வீரர்கள் அனைவருக்கும் ஜடேஜா வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. இதை எப்படி செய்யப்போகிறார் என்பதும் தோனிக்கு முன் உள்ள சவால்தான்.

நெருக்கடிகளை சமாளிப்பாரா?

சிஎஸ்கே மற்றும் இந்திய அணியைப் பொறுத்தவரை ஒரு ஜாலியான மனிதர் என்ற இமேஜ்தான் ஜடேஜாவைப் பற்றி உள்ளது. எதற்கும் கவலைப்படாத அவரது மனநிலை பல நேரங்களில் அவரது வெற்றிகளுக்கு கைகொடுத்துள்ளது. அதே மனநிலையை ஒரு கேப்டனாகவும் அவரால் கடைபிடிக்க முடியுமா என்பது கிரிக்கெட் வல்லுநர்கள் முன்வைக்கும் கேள்வி. அப்படிச் செய்ய முடிந்தால் அவரால் நிச்சயம் சாதிக்க முடியும். இல்லாவிட்டால் கஷ்டம்தான்.

இந்த சவால்களை ஜடேஜா எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...