No menu items!

சிஎஸ்கேவின் கதை 1

சிஎஸ்கேவின் கதை 1

கிரிக்கெட் வீரர்கள் காட்டில் இப்படி பண மழை பெய்வதற்கு முக்கிய காரணம் ஐபிஎல். இத்தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிடைக்கும் பணத்தைப் பார்த்து மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களெல்லாம் வாயைப் பிளக்கின்றன.

1.ஸ்டார்ட்டிங் பாயிண்ட்

இந்திய கிரிக்கெட்டை உச்சாணிக் கொம்புக்கு கொண்டுபோன ஆண்டு 1983. இந்த ஆண்டில்தான் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று புகழின் உச்சத்தைத் தொட்டது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றபோது இந்திய வீரர்களுக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?… வெறும் 2,100 ரூபாய். இதில் போட்டியில் ஆடுவதற்கான சம்பளம் ரூ.1,500. தினசரி அலவன்ஸ் ரூ.600.
ஆனால் இன்று சாதாரண ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடும் வீரர்கள்கூட லட்சங்களிலும் கோடிகளிலும் பணத்தை அள்ளிச் செல்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் காட்டில் இப்படி பண மழை பெய்வதற்கு முக்கிய காரணம் ஐபிஎல். இத்தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிடைக்கும் பணத்தைப் பார்த்து மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களெல்லாம் வாயைப் பிளக்கின்றன.
2007-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த படுதோல்விதான் இந்த ஐபிஎல் தொடருக்கு வித்திட்டது. இந்த தொடரில் முதல் சுற்றிலேயே இலங்கை மற்றும் வங்கதேச அணிகளிடம் தோற்று இந்தியா வெளியேற, அதற்கு புத்துணர்ச்சியூட்டும் வழிகளை கிரிக்கெட் வல்லுநர்கள் யோசிக்கத் தொடங்கினர்.

இந்த காலகட்டத்தில் சுபாஷ் சந்திரா (ஜீ தொலைக்காட்சியின் அப்போதைய உரிமையாளர்) என்பவருக்கு சொந்தமான எஸ்ஸெல் ஸ்போர்ட்ஸ் பிரைவெட் லிமிடட் நிறுவனம் ஐசிஎல் (இந்தியன் கிரிக்கெட் லீக்) என்ற கிரிக்கெட் தொடரை தொடங்குவதாக அறிவித்தது. 1977களில் கெர்ரி பாக்கர் (Kerry Packer) என்பவரால் தொடங்கப்பட்ட உலக சீரிஸ் கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் இத்தொடரை நடத்த சுபாஷ் சந்திரா திட்டமிட்டார். இத்தொடரை நடத்துவதற்கான முக்கிய பொறுப்பில் கபில்தேவை நியமித்தார்.

கபில்தேவும், சுபாஷ் சந்திராவும் இணைந்து மிகப்பெரிய கனவுடன் இத்தொடரை தொடங்கினர். 9 அணிகளை நியமித்து வீரர்களையும் தேர்வு செய்தனர். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதை ரசிக்கவில்லை. கிரிக்கெட் ஆட்டத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒருவர் ஐசிஎல் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை நடத்தக்கூடாது என்று கூறி, இதில் விளையாடும் வீரர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் அதற்கு மாற்றாக மற்றொரு தொடரை நடத்த தீர்மானித்தது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அப்போதைய துணைத் தலைவரான லலித் மோடியிடம் இதற்கான பொறுப்பை ஒப்படைத்தது.

வர்த்தக உலகில் ஏற்கெனவே பல வெற்றிகளைக் குவித்தவரான லலித் மோடி, தன் ஒட்டுமொத்த பிசினஸ் உத்திகளையும் கிரிக்கெட்டில் கொட்டினார். அவரது மூளையில் அப்போது உதயமான தொடர்தான் ஐபிஎல்.

வர்த்தக உலகில் ஏற்கெனவே பல வெற்றிகளைக் குவித்தவரான லலித் மோடி, தன் ஒட்டுமொத்த பிசினஸ் உத்திகளையும் கிரிக்கெட்டில் கொட்டினார். அவரது மூளையில் அப்போது உதயமான தொடர்தான் ஐபிஎல்.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்ப்பூர், மொகாலி, ஹைதராபாத் ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு அணியையும் ஏலத்தில் விடுவதென்றும், அதிலிருந்து கிடைக்கும் பணத்தை பிசிசிஐயின் மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது என்றும் திட்டமிடப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்ட இந்த ஏலத்தில் சென்னையை மையமாகக் கொண்ட அணியை 91 மில்லியன் டாலர்களைக் கொடுத்து (672 கோடி ரூபாய்) இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வாங்கியது. அந்த அணிக்கு வைக்கப்பட்ட பெயர் சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஒரு படை என்றால் அதற்குத் தலைவன் இருக்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் என்று அணிக்கு பெயர் வைத்தாயிற்று. அந்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அதாவது சிறந்த ராஜாக்களைக் கொண்ட அணிக்கு அதிசிறந்த ராஜாவாக ஒரு தலைவன் தேவையல்லவா… சிஎஸ்கே நிர்வாகம் யோசிக்கத் தொடங்கியது.
(சிங்கத்தின் கர்ஜனை தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...