No menu items!

ட்விட்டரில் தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா

ட்விட்டரில் தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனுஷின் பெயரை எடுத்துவிட்டார். இதுவரை ‘ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்’ என இருந்த இவரது பெயர் இப்போது ‘ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ என மாற்றப்பட்டுள்ளது.

கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்துகொண்டாலும்,  “நாங்கள் இன்னும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்” என்று சொல்வது சினிமா பிரபலங்களின் பாணி. தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியையும் நாம் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

2004-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடிக்கு  யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக தாங்கள் பிரிவதாக சில நாட்களுக்கு முன் இந்த ஜோடி அறிவித்தது. திரையுலகில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவாகரத்து குறித்து ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் கருத்து ஏதும் சொல்லாத நிலையில், “இது சாதாரண குடும்ப சண்டைதான்” என்று விளக்கம் அளித்தார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா.

விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யாவின் இசை ஆல்பம் வெளியானபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனுஷ் ட்வீட் செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு ஐஸ்வர்யாவும் நன்றி தெரிவித்திருந்தார்.

சென்னையில் சமீபத்தில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் மகன்களுடன் தனுஷ் கலந்துகொண்டார். இதுபோன்ற சம்பவங்களால், இந்த நட்சத்திர ஜோடி மீண்டும் இணையுமோ என்றுகூட திரையுலகில் பேசப்பட்டது.

விவாகரத்து செய்தாலும் சமூக வலைதளங்களில் தனது ஹேண்டிலில் தனுஷின் பெயரை ஐஸ்வர்யா மாற்றாததால் இந்த ஜோடி இன்னும் அன்பாக இருப்பதாக ரசிகர்கள் எண்ணியிருந்தனர். மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லிவந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனுஷின் பெயரை எடுத்துவிட்டார். இதுவரை ‘ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்’ என இருந்த இவரது பெயர் இப்போது ‘ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ என மாற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி விசாரித்தபோது, “ட்விட்டர் பக்கத்தில் பெயரை மாற்ற வேண்டுமானால் சில காலம் காத்திருக்க வேண்டும். அதனால்தான் அவரது பெயர் இத்தனை நாள்  மாறாமல் இருந்தது” என்று தெரிவிக்கின்றனர்.

ட்விட்டரில் பெயர் மாறினாலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கங்களில் ஐஸ்வர்யாவின் பெயர் இன்னும் ஐஸ்வர்யா தனுஷ் என்றே வருகிறது.  

மார்க் இன்னும் மனசு வைக்கவில்லை போலும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...