No menu items!

டெல்லி கேபிடல்ஸ் – அதிரடி வீரர்களின் கோட்டை

டெல்லி கேபிடல்ஸ் – அதிரடி வீரர்களின் கோட்டை

ஐபிஎல் தொடரில் வேகமாக வளர்ந்து வரும் அணி டெல்லி கேபிடல்ஸ். இத்தொடரின் ஆரம்ப காலகட்டத்தில் டெல்லியை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், ஆர்சிபி ஆகிய அணிகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தின.

ஆனால் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளரான பிறகு டெல்லி அணியின் முகம் மாறியது. ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், பிருத்வி ஷா என இந்திய பேட்டிங்கின் இளம் படை டெல்லி அணியில் இணைய, அந்த அணியின் பாய்ச்சல் உச்சத்தை தொட்டது.

கடந்த ஆண்டில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற்றபோதிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு மேல் நகர முடியவில்லை.

2020-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய டெல்லி, கடந்த ஆண்டில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற்றபோதிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு மேல் நகர முடியவில்லை. இந்தச் சூழலில் இந்த முறை எப்படியும் கோப்பையை வென்றாக வேண்டும் என்று வீரர்களை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துள்ளனர் டெல்லி அணியின் நிர்வாகிகள்.

கேப்டன்ஷிப் பிரச்சினையால் ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இருந்து வெளியேற, அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷர்துல் தாக்குர் என ஏகப்பட்ட நட்சத்திர வீரர்களை வாங்கிக் குவித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ்.

பலம்:

பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த், கே.எஸ்.பரத், சர்பிராஸ் கான், மிட்செல் மார்ஷ், ஷர்துல் தாக்குர் என மற்றவர்கள் பார்த்து மலைத்து நிற்கும் வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டது டெல்லி அணி. இதனால் ஒன்றிரண்டு வீரர்கள் சறுக்கினாலும், மற்ற வீரர்கள் கைகொடுத்து தூக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிரடி பேட்ஸ்மேன்களில் குறிப்பிடத்தக்க நபராக இருக்கிறார் கேப்டன் ரிஷப் பந்த்

அங்குள்ள அதிரடி பேட்ஸ்மேன்களில் குறிப்பிடத்தக்க நபராக இருக்கிறார் கேப்டன் ரிஷப் பந்த். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே 28 பந்துகளில் அரை சதம் அடித்தவர், டி20 போட்டிகளில் எந்த அளவுக்கு வேகம் எடுப்பார் என்று சொல்லத் தேவையில்லை. சீனப் பெருஞ்சுவர் போன்ற பேட்டிங் வரிசை இருப்பதால் எதிரணியில் எத்தனை பகாசுர பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் டெல்லிக்கு கவலையில்லை. அதே நேரத்தில் எதிரணியைத் தாக்க நோர்ஜே, முஸ்தபிசுர் ரஹ்மான், நாகர்கொடி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை டெல்லி டேர் டெவில்ஸ் அணி கொண்டுள்ளது.

பலவீனம்:

சுழற்பந்து வீச்சில் சுணங்கிக் கிடக்கிறது டெல்லி.

பேட்டிங், வேகப்பந்து வீச்சு ஆகிய 2 துறைகளிலும் வலிமையாக இருந்தாலும் சுழற்பந்து வீச்சில் சுணங்கிக் கிடக்கிறது டெல்லி. குல்தீப் யாதவ்தான் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர். ஆனால் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்ததால் கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் அவர் பந்துவீசவே அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் ஐபிஎல் நடப்பதால் இந்த பலவீனம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...